சட்டமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்தலை நடத்துங்கள் – சட்டமா அதிபர் திணைக்களம்

2020 பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 19 அன்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுக் காலத்தில் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டமையினால் தாக்கங்கள் குறித்து ஆணைக்குழு ஒரு கருத்தை கோரியிருந்தது.

தேர்தல் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள இந்தச் சர்ச்சை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டார்.

பொதுத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மார்ச் 19 ஆம் திகதி வியாழக்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி 12 மற்றும் 13 வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

14 மற்றும் 15 ஆம் திகதிகள் சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள். எனினும் கொரோனா நெருக்கடியை ஆரம்பமானதால் 16ஆம் திகதி திங்கட்கிழமையன்று ஊரடரங்கு பிறப்பிக்கப்பட்டமையுடன் அதுபொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், குறித்த தினங்களை பொதுவிடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வர்த்தகமானிமூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போதுதான் தங்களுக்குத் தெரியவந்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சட்டப்படி வேட்புமனுக்கள் தாக்கலுக்கு வழங்கப்பட்ட நாள்களில் நான்கு நாள்கள் அதுவும் கடைசி நான்கு தினங்களும் பொதுவிடுமுறைகளாகும். அத்தகைய பொதுவிடுமுறை தினத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் சட்ட ரீதியானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டவியாக்கியானங்களை கோரியிருந்த நிலையில் சட்டமா அதிபர் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.