விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள் சுற்றிவளைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

நோன்பு காலத்தையொட்டி நடத்தப்பட்டு வரும் விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உணவகங்களும் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டதோடு, உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் விற்பனை செய்யும் ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு இதன்போது அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அத்தோடு, சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணி உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக வரும் காலங்களில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.