இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஐந்து முப்பது மணியளவில் நாட்டினுடைய பிரதமரை  சந்திக்கின்றது

குறித்த கலந்துரையாடலில் நாட்டின் இனப்பிரச்சனை சம்பந்தமாகவும் தமிழர்களின் பிரச்சனை மறை பொருளாக அல்லது பேசப்படாத பொருளாகவும் கொரோனாவை சாட்டாக வைத்து போவதால் ஏற்கனவே ஜெனிவா மற்றும் பல சர்வதேச நாடுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் கழிந்து செல்வதாலும் இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு சித்தார்த்தன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராசா தவிர்ந்த பன்னிரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

விஜயராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ச அவர்களின் வீட்டில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது அத்துடன் கொரோனாவின் தாக்கம் , நிவாரணப்பணிகளில் உள்ள குறைபாடுகள் அரசால் வழங்கப்படும் நிவாரணப்பணிகளை அரசியலாக்கி வழங்குதல் தொடர்பாக கலந்துரையாட இருப்பதாக  பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களை தொடர்புகொண்டு குறித்த கலந்துரையாடல் தொடர்பில்  வினவியபோது தெரிவித்தார்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்