மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது  இதன் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார்

இதன் போது கருத்து தெரிவித்த அவர்

குறிப்பாக ஆனையிறவு சோதனைச்சாவடியில் மிகவும் இறுக்கமான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது குறிப்பாக நேற்றைய தினம் யாழில் இருந்து கொழும்புக்கு வருகை தந்த போது வவுனியாவரை மிகவும் இறுக்கமான நடைமுறையை இராணுவத்தினர் முன்னெடுக்கின்றனர் ஆனால் வவுனியாவிற்கு அங்கால் எந்த இறுக்கமான நடைமுறையையும் காணவில்லை ஆனையிறவு சோதனை சாவடியில் என்னைக்கூட மூன்று தடவை திருப்பி அனுப்பியுள்ளார்கள் நாட்டில் எந்த சோதனைச் சாவடியிலும் இல்லாத மிகவும் நெருக்கமான சோதனை நடைபெறுவதற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவல்லை  எனவும்

அரசால் வழங்கப்படுகின்ற ஐந்தாயிரம் நிவாரணம் போதாது  நாளாந்த தினக் கூலிக்கு செல்பவர்கள் ,முச்சக்கர வண்டி உரிமையாளர்களாக இருந்து நாளாந்த உழைப்புக்கு செல்பவர்கள் புகைப்பட பிடிப்பாளர்கள் ,சிகை அலங்கரிப்பாளர்கள்,உள்ளூர் நன்னீர் மீன்பிடியாளர்கள்    என அனைவரும் நாளாந்த வருமானம் பாதிக்கப்படுள்ளது  இதனை விட பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் அரசால் வழங்கப்படும் நிவாரண உதவி போதாது இதனை அதிகரிக்க வேண்டும் குறைந்தது மாதம் ஒன்றிற்கு பத்தாயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்பட வேண்டும் வழங்கினால் மட்டுமே நிம்மதியாக அவர்கள் வாழ்கையை கொண்டு நடத்த முடியும்  எனவும்

பாடசாலைகளை  கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதனை  இட்டு மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தோன்றி உள்ளது எனவே பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களை தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்ற வேண்டாம் அதற்கான பொருத்தமான இடங்களை தெரிவு செய்யுங்கள் போன்ற மூன்று விடயங்களை  முன்வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்