கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் ரமழான் மாதத்தின் சமூகநேய உலர் உணவு வழங்கும் நிகழ்வு…
(எம்.எம்.ஜபீர்)
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூரின் சொந்த நிதியிலிருந்து ரஹ்மத் பவுண்டேசனின் சமூக சேவைகள் பிரிவினால் வருடாந்தம் புனித ரமழான் மாதத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்கள், விதவைகள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், உள்ளிட்ட அங்கவீனமுற்றவர்களுக்கும் அமைப்பின் உப தலைவர் எஸ்.எல்.எம்.ஜெஸீல் உள்ளிட்ட அமைப்பின் முக்கியஸ்தர்களினால் இன்று உலர் உணவு பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்ளினால் அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை