சொகுசு வேனில் வெள்ளரிப்பழம் விற்பனை…

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல்வேறு தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

அந்தவகையில், பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன் உரிமையாளர்களும் தொழில் பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை தற்போதைய சூழ்நிலையில் செய்து கொள்ள முடியாத நிலையில் வேன் சாரதிகள், உரிமையாளர்கள் காணப்படுகின்றனர்.

ஏதோவொரு வகையில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டம், கிரான் குளம் பகுதியைச் சேர்ந்த வேன் உரிமையாளர் ஒருவர் அவரது சொகுசு வேனில் ஓட்டமாவடி பகுதியில் வெள்ளரிப்பழம் விற்பனையில் ஈடுபட்டார்.

அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதினால் இத் தொழிலை முன்னெடுத்துள்ளதாக வேன் உரிமையாளர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்