தமிழரசு இளைஞர் அணியால் சுன்னாகம் கிழக்கில் உதவிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மானிப்பாய் தொகுதி இளைஞர் அணியினரால் சுன்னாகம் கிழக்குப் பிரதேசத்தில் சுயதொழில் செய்யும் 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி வாலிபர் முன்னணி செயலாளரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகருமான லயன் சிற்சபேசன் கௌரீஷனின் ஏற்பாட்டில், புலம்பெயர் தேசத்திலுள்ள யாழ். இந்துக் கல்லூரி 2008 உயர்தரப் பிரிவு மாணவர் ஒருவரின் நிதிப் பங்களிப்பில் இந்த உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவரும் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபையின் உறுப்பினரும் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மானிப்பாய் தொகுதி செயலாளரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகருமான லயன் சி.கௌரீசன், இலங்கைத் தமிழரசுக் கட்சி மானிப்பாய் தொகுதி வாலிபர் முன்னணி உறுப்பினரும் பிரபல ஆசிரியருமான கவாஷ்கர், வலி.தெற்கு பிரதேசசபை உத்தியோகத்தர் சதீஸ்குமார் ஆகியோர் கலந்து வழங்கிவைத்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.