தேர்தல் வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் ஆணைக்குழு

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.

அதன்படி சுகாதார அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களைத் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட சில தினங்கள் அரச பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையால், ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் செல்லுபடித்தன்மை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

அதாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்ச் மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளை விசேட அரச பொது விடுமுறையாக அறிவித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு, சட்ட வியாக்கியானத்தை கோரியதை அடுத்து, 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்றி முன்னெடுத்து செல்லுமாறு சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.

மேலும் 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலுக்குரிய வேட்புமனுக்களை ஏற்று, அது தொடர்பான ஆரம்பகட்ட செயற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதை தாம் அவதானித்ததாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குறித்த கடிதத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பான கையேட்டினை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.