இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த – அமெரிக்கத் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கொரோனா வைரஸை எதிர்க்கொள்ளும் இலங்கையின் நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர், இலங்கையின் பொதுசுகாதார நிலைமை சீராகவேண்டும் என்று தமது நாடு எப்போதும் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அமெரிக்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்தோடு, இலங்கையின் முக்கிய ஆடைத்தொழிற்சாலைகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய கேள்வியை கொண்டுள்ள தனிப்பாதுகாப்பு உபகரண தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதனை செவிமடுத்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு குறித்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்களை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை இரண்டு பேரும் இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதாக இலங்கையின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.