கொரோனா ஒழிப்புக்கு பல்வேறு தரப்பினரும் உதவி

சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹேன்ஸ் பீடர் மொக்கின் (Hans Peter Mock) பணிப்புரையின் பேரில் வாரியோ சிஸ்டம் (VARIO SYSTEMS) நிறுவனம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளது.

வாரியோ சிஸ்டம் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டீ.சதீஷ்வரம் உள்ளிட்ட பணிக்குழாமினர் ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார ஆகியோரிடம் கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் உபகரணங்களை கையளித்தனர்.

இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. சொய்ஸாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இலங்கை மொபிடெல் நிறுவனம் அன்பளிப்பு செய்த கையடக்க தொலைபேசிகள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டாரவினால் நேற்று(செவ்வாய்கிழமை) முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கஜநாயகவிடம் கையளிக்கப்பட்டன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தொண்டை, காது, மூக்கு சிகிச்சை பிரிவின் மருத்துவர் மகேஷ்சின் கோரிக்கையின் பேரில் இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.