தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டே தமிழ்தேசியகூட்டமைப்பு பிரதமர் மகிந்தவின் அழைப்பை ஏற்றது! பா.அரியநேத்திரன். மு.பா.உ.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு மதித்துள்ளது.வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் விடயங்களை கருத்தில் கொண்டே பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்.

நாடாளுமன்றத்தில் இறுதி அமர்வில் அங்கம் வகித்த பாராறுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மகிந்த அழைத்தபோது பல எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த அழைப்பை நிராகரித்து அதில் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சியாக இருந்த போதும் அதில் அலரிமாளிகையில் கலந்து கொண்டனர் இதையிட்டு பலரும் பலவுதமான கருத்துக்களை முன்வைக்கின்றன்னர் பலர் ஏனைய எதிர்கட்சிகளைபோல் கலந்து கொள்ளாமல் விட்டிருக்கவேண்டும் உப்பு சப்பற்ற பிரதமரின் கூட்டம் எனபல விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

என்னைப்பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதமரின் அழைப்பை ஏற்று கலந்துகொண்டது ஒரு நல்லெண்ண செயல்பாடாகவே கருதமுடியும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து இருக்கும் இவ்வேளையில் தற்போது தேர்தல் நடத்தமுடியாமல் கொரோனா வைரஷ் நோய் தாக்கம் அதிகரிக்கும் இவ்வேளையில் காபந்து அரசின் பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை இக்கட்டான நேரத்தில் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும்போது அங்கு சென்று நேரடியாக தமது கருத்துக்களை தெரிவிப்பதில் எந்த தப்பும் இல்லை.

அவ்வாறுதான் தமிழ்தேசிய கூட்டமைப்பும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பல ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்தனர் அதை ஏற்பது ஏற்காமல் விடுவது என்பது வேறு நாட்டின் பிரதமர் என்ற வகையில் அவரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்வதுதான் ஜனநாயகப்பண்பாகும்.

அரசியல் என்பது தாம் சார்ந்த சமூகத்தின் எதிர்கால விடயங்களை கருத்தில் கொண்டு அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமாயின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் அல்லது வகிபாகம் வகிக்கும் சிங்கள பெரும்பான்மை கட்சித்தலைவர்களின் அழைப்புகளை உதாசீனம் செய்வோமானால் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குபின்பும் சில விடயங்களை பேச்சு வார்த்தைகள் மூலம் கையாளக்கூடிய தேவை தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்டாயம் உண்டு அந்த வகையில் தேர்தலுக்கு முன்பாக நடைமுறையில் உள்ள காபந்து அரசின் பிரதமர் சிலவளைகளில் மீண்டும் பிரதமராக அல்லது ஆளும் தரப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டால் பல தேவைகளை அந்த ஆட்சியில் உள்ளவர்களுடன் பேசுவதற்கான சூழலை உருவாக்கவேண்டும்.

அரசியல் என்பது ஆளும்தரப்பு எதிர்தரப்பு என எல்லோரிடமும் பேசி தாம் சார்ந்த விடயங்களை வென்றெடுப்பதும் மக்கள் நலன் சார்ந்த தேவைகளை கேட்டுப்பெறுவதும் அரசியல்தான்.

ஏனைய ஐக்கியதேசிய கட்சியைப்போன்றோ, ஜே.வி.பி போன்றோ, சஜீத்மிரமதாசா, மனோகணேசன்,ஹக்கீம் போன்றோ அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு செயல்படும் கட்சி இல்லை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தாயக மக்களின் விடுதலை,சுயநிர்ணய உரிமை,அரசியல் தீர்வு, இதனுடன் இணைந்த அபிவிருத்தியை முன்எடுக்கும் தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஒரு தமிழ்தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ்தேசியகூட்டமைப்பு மதித்து பங்குபற்றியது என்ற உண்மையை அனைவரும் விளங்கி கொள்ள வேண்டும் எனவும் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.