கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

36 வயதுடைய பெண்ணே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தினமும் மதுபோதையில் வரும் கணவன், மனைவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமையைப் பொறுக்க முடியாத கட்டத்தில், கணவனைக் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் ஹாலி எல பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்