தமிழ் சி.என்.என். இனால் சுழிபுரத்தில் உலர் உணவு!
கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகளுக்கு காட்டுப்புலம் சுழிபுரம் பகுதிக்கு தர்மசிறிராஜன், சுகந்தி, நவினன் மற்றும் தர்ஷிக்கா என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்கள் அனுசரணை வழங்கியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே காட்டுப்புலம் சுழிபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.
இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் ஸ்கந்தமயம் சிவமயம் ,பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த லோஜன், புவிராஜ், வினுசன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை