மின்சார சபையின் சுத்திகரிப்பாளர்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பு உலர் உணவு!

இலங்கை மின்சார சபையின் யாழ். அலுவலகத்தில் கடமையாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 15 பேருக்கு யாழ். இந்துக்கல்லூயின் 2008 உயர்தர பழையமாணவர் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒருவரின் நிதி அனுசரணையில் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷனின் ஒழுங்கமைப்பில் தமிழ் இளையோர் கூட்டமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தி.பிரகாஷ், தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியர் லயன் சி.ஹரிகரன், வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், வேலணை பிரதேசசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.மயூரன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.

தமிழ் இளையோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதலாவது செயற்றிட்டம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்