மன்னாரில் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.
மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்றாஜ் தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் நினைவுகூரல் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின்போது ரெலோவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஸ்ரீ சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை