சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் 4 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!
யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்தில் இருந்துவந்த போதகர், அரியாலை தேவாலயத்தில் நடத்திய மத ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அரியாலை ஆராதனையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை