29 பேரில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிப்பு!
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 29 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏனைய நால்வரும் கடற்படை உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை