கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – மஹிந்த!

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமது பௌத்த சம்பிரதாயத்தின் படி ஒருவரது வயது வெசாக் பூரணை எண்ணிக்கைக்கு அமைவாகவே கணிக்கப்பட்டது.

எதிர்காலம் தொடர்பிலும் வெசாக் பூரணையை அடிப்படையாக வைத்தே கூறப்பட்டது. பௌத்த தர்மத்தை பாதுகாக்கும் அரசாங்கம் எப்போது வரும் என அன்று என்னிடம் கேட்டபோது நான் வெசாக் பூரணை எண்ணிக்கையை தெரிவித்து பதிலளித்தேன்.

தற்போது அந்த பூரணை வந்துள்ளது. புத்த பகவானின் தர்மத்தை உணர்ந்தவர்கள், அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த அழிவுகளைக் கண்டு கவலையடைய மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.