ஆசிய அபிவிருத்தி வங்கி தூதுக்குழுவினர் கல்முனை விஜயம். 11உறுப்பினர்களின் முறைப்பாட்டையடுத்து கலந்துரையாடலுடன் களவிஜயம்!

கல்முனை மாநகசபை எல்லைக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000மில்லியன் ரூபா கடனுதவித்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் 11பேரால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து நேற்று(5) திட்டத்திற்கான குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர்.

ஆசிய அபிவிருத்திவங்கியின் இலங்கைக்கான இரண்டாம்தர நிலையான நகர அபிவிருத்திக்கான திட்டப்பணிப்பாளர் பொறியியலாளர் காமினி விஜேவர்த்தன உள்ளுராட்சி மாகாணபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுடீன் திட்டப்பொறியியலாளர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.
முதலில் முறைப்பாடு செய்த 11உறுப்பினர்கள் மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் நகர அபிவிருத்திதிட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்வர்களுடனான சந்திப்பும் விசேட கலந்துரையாடலும் கல்முனை மாநகரசபைப் பணிமனையில் நடைபெற்றது.

சந்திப்பைத்தொடர்ந்து முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக குழுவினர் களவிஜயமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டனர்.
அதன்போது ஏலவே நகர அபிவிருத்தித்திட்டம் தயாரிக்கப்படும்போது இந்த நியாயமான அபிவிருத்தித்திட்டங்கள் திட்டத்துள் உள்ளடக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட விடயம் தெரியவந்தது.

துரவந்தியமேடு கிராம பாதை அபிவிருத்தி கல்முனை தமிழ்ப் பகுதி இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அனைத்து மாடிவீட்டு கழிவகற்றல் செயற்பாடுகள் சிறுவர் பூங்கா இன்னும் முக்கிமான பாதைகள் புனரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கைக்காகவும் சிபார்சு செய்யப்பட்ட இடங்கள் பார்வையிடப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி இத்திட்டம் தொடர்பான விளக்கங்களும் கலந்துரையாடலும் திட்டத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களை அழைத்து வலுவூட்டுவதற்கான அமர்வு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கான அழைப்பு கடிதங்கள் கல்முனை மாநகரசபை மேயரின் கையொப்பத்துடன் மாநகரசபையின் சில உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதேவேளை அழைப்பு கடிதம் கல்முனை மாநகரசபையின் பல உறுப்பினர்களுக்கு கிடைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தன.

அழைப்பு கடிதங்கள் மேயருக்கு சார்பு போக்குடையவர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டதாகவும் தாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாகவும் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவர் த.வி.கூட்டணி உறுப்பினர்கள் மூவர் மற்றும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை அன்றைய தினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் மார்ச் மாதம் 23 ஆம் திகதி மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் சிவலிங்கம் பொன் செல்வநாயகம் செல்வராஜா ஆகிய நான்கு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி காரியாலயத்திற்கு சென்று 11 உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட முறைப்பாட்டு கடிதத்தை நேரடியாகவும் கையளித்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் உதவிச்செயலாளர் அடங்கிய குழு நேற்று (5) கல்முனை மாசகரசபை கட்டடிடத்தில் விஷேட கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இக் கூட்டத்தில் முறைப்பாடு செய்திருந்த உறுப்பினர்கள் பங்குபற்றி தங்கள் பக்க நியாயங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

அதடினப்படையில் துரைவந்தியமேடு பாதை கல்முனை தமிழ் இளைஞர்களின் விளையாட்டு மைதானம் அனைத்து தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளுக்குமான கழிவகற்றல் செயற்பாடுகள் மற்றும் விதிகள் புனரமைப்புக்கும் சிபார்சு செய்யப்பட்டதாகவும் கல்முனை வயல்காணிகளோ அதற்கான வாய்க்கால் மற்றும் குளங்களோ நிரப்பப்படமாட்டாது எனவும் உறுதியளித்ததாகவும் மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் மற்றும் சிவலிங்கம் ஆகியோர் சந்திப்பின் பின்னர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.