மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

விசா காலம் முடிவடைந்தும் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பதிரன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் தங்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கைக்கு வருகை தர விரும்பும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை அரசாங்கம் வழங்கும்.

இதற்கமைய அடுத்த வரும் சில நாட்களில் மாலைத்தீவு, குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்படும்.

விசா காலாவதியான பின்னரும் அந்தந்த நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை இலவசமாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விமான பயண சீட்டை பெற்றுக் கொடுக்க சில நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து அவர்களை தனிமைப்படுத்தப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.