இராணுவ வீரர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்து – 7 பேர் காயம்!

பொலன்னறுவை – ஹபரன பிரதான வீதியின் கிரிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ வீரர்கள் பயணம் செய்த கெப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமை காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.