கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் மழை: பப்பாசி செய்கை கடுமையாகப் பாதிப்பு!
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
முழங்காவில் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த பரமநாதன் சிவகுமார் என்ற விவசாயினால் மேற்கொள்ளப்பட்ட பப்பாசி தோட்டத்தில் மரங்கள் காற்றினால் முறிந்துள்ளன.
இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 பப்பாசி மரங்கள் முறிந்து நாசமாகியுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக மழைவீழ்ச்சி பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை