யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததால் அந்தக் கைதி விடுதலை செய்யப்படவில்லை.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31இன் கீழ் பெரும்குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கே பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, சிறு குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்.

இன்று விடுதலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக சிறைச்சாலை வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.