ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி இருக்கின்றபோதும் நான்கு மாவட்டங்களிலிருந்து வருவோர் பாஸ் பெற்றே பயணிக்க வேண்டும்.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திருப்பியதாக இருந்தாலும்
சுகாதார சம்பந்தமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மன்னாரில்
மேற்கொள்ளப்படும். குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களிலிரு மன்னார்
வந்து செல்வோர் மீது பாஸ் நடைமுறை தொடரும் என இது விடயமாக நடைபெற்றக்
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஐனாதிபதியின் விஷேட செயலனியின் தலைவர் பசீல் ராஐபக்ச நேற்றைய முன் தினம்
(06.05.2020) தொலைபேசியின் மூலம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம்
கேட்டுக் கொண்டதுக்கு இணங்க நேற்று வியாழக் கிழமை (07.05.2020) மன்னார்
மாவட்ட செயலகத்தில்   செயலமர்வு இடம்பெற்றது.

இவ் செயலமர்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
தா.வினோதன், பொலிஸ் உதவி அத்தியட்சகர், இராணுவ அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள் உட்பட திணைக்களங்களின் முக்கிய அதிகாரிகளும் இதில் கலந்து
கொண்டனர்.

இவ் செயலமர்வு இடம்பெற்ற பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
சி.ஏ.மோகன்றாஸ் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களின் தலைவர்களையும் அழைத்து
எதிர்வரும் 11 ந் திகதிக்குப் பின்னர் நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்
நீக்கப்பட இருப்பதால் நாடு வழமைக்கு திரும்பும்போது எமது மன்னார்
மாவட்டத்தில் எவ்வாறான வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது
கலந்துரையாடப்பட்டது.

நாடு வழமைக்கு திரும்பியுள்ளது என்பது இனிமேல் அனைவரும் தங்கள்
கடமைக்குத் திரும்ப வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் தவிர ஏனைய நிறுவனங்கள்
மற்றும் தொழில் முயற்சியாளர்கள் அனைவரும் வழமைபோன்று செயல்பட வேண்டும்.

இதில் குறிப்பாக பாடசாலைகள் இயங்காது. களியாட்டங்கள், பொது மக்கள்
ஒன்றுகூடுவது, மத ஸ்தானங்களில் வழிபாடுகள் இவ்வாறு போன்ற அனைத்து பொது
மக்கள் கூடும் இடங்கள் தற்பொழுது நடைமுறையில் இருப்பது போன்றே வழமைக்குத்
திரும்பாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இதற்கு ஆய்த்த நடவடிக்கையாகவும் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளுக்கு
தீர்வை எவ்வாறு பெறுவதும் என்பதற்காகவே இவ் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

நாடு அல்லது எமது மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் தற்பொழுது
நடைமுறையில் இருக்கும். மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்
தா.வினோதன் தெரிவித்தது போன்று  சுகாதாரம் மிக கட்டாயம் பேணப்பட
வேண்டும்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்.
இவைகள் தங்கள் சேவைகளை மேற்கொள்ளும்போது தற்பொழுது நடைமுறையில் உள்ள
பிரயாணிகளின் இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.

இவர்களின் சேவையில் இடம்பெறும் இலாபம் நஷ;டம் இவைகளுக்கு அவரவர்
திணைக்களம் அல்லது சங்கங்களே பொறுப்பாகும். ஏக்காரணம் கொண்டும்
இடைவெளியின்றி பிரயாணிகளை நிறைத்துக் கொண்டு செல்ல முடியாது.

அலுவலகங்களில் கை கழுவும் செயல் முறை இடைவெளி விட்டு இருந்துக் கொண்டு
கடமையில் செயல்பட வேண்டும். கட்டாயம் தற்பொழுது நடைமுறையில்
இருப்பதுபோன்று மாஸ் ஒவ்வொருவரும் அணிந்தவர்களாகவே இருக்க வேண்டும்.

மூன்று முக்கிய திணைக்களங்களை வலியுறுத்தி இருக்கின்றோம். ஒன்று வர்த்தக
சங்கம், அடுத்து சலூன் மற்றையது போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றில்
சுகாதாரத்தை  வலியுறுத்தியுள்ளோம்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குறிப்பாக நாலு மாவட்டங்களிலிருந்து
இங்கு வருபவர்கள் பாஸ் எடுத்துக் கொண்டே வர வேண்டும். அதாவது கொழும்பு.
கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் இப் பகுதியில் இருப்பவர்கள் பாஸ்
பெற்றவர்களாகவே தங்கள் பயணங்களை தொடர முடியும்.

இவர்கள் மட்டில் பொலிசார் பரிசோதனை மேற்கொண்டே உள் நுழைய அனுமதிப்பர்.
அவ்வாறு ஏனைய மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் பரிசோதனைக்கு
உள்ளாக்கப்படுவர்.

இருந்தபோதும் ஊரடங்கு சட்டத்தின்போது மக்கள் எவ்வாறு செயல்பட்டனரோ
அவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஊரடங்குச் சட்டம்
தளர்த்தப்பட்டாலும் தங்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க தாங்களே கவனம்
செலுத்தப்பட வேண்டும் என்றார்.

மன்னார் மாவட்டத்தின் ஒவ்வொரு நுழைவாயில்களிலும் ஒவ்வொருவரையும்
பரிசோசித்தே அனுமதிக்க பொலிசாரின் உதவிகள் கோரப்பட்டு செயல்பட
இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து சென்று வருவோருக்கு மட்டுமே
பாஸ் நடைமுறை இருக்கும். ஏனைய மாவட்டங்களிலிருந்து வந்து செல்வோருக்கு
பாஸ் நடைமுறை இருக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.