மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் முகச்சவரம் செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும்!

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டு சேவைகளை
முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் கொனோரா தொற்று நோய்க்கு
உள்ளாகாதப்படி சுகாதாரத்தை கட்டாயம் பேணப்பட வேண்டும். சிகை அலங்கார
நிலையங்களில் முகச்சவரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இது
விடயமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்
சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐனாதிபதியின் விஷேட செயலனியின் தலைவர் பசீல் ராஐபக்ச நேற்றைய முன் தினம்
(06.05.2020) தொலைபேசியின் மூலம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம்
கேட்டுக் கொண்டதுக்கு இணங்க நேற்று வியாழக் கிழமை (07.05.2020) மன்னார்
மாவட்ட செயலகத்தில்   செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.

இவ் செயலமர்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
தா.வினோதன், பொலிஸ் உதவி அத்தியட்சகர், இராணுவ அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள் உட்பட திணைக்களங்களின் முக்கிய அதிகாரிகளும் மற்றும் சிகை
அலங்கார பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்
ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் எதிர்வரும் 11 ந் திகதி ஊரடங்குச் சட்டம்
தளர்த்தப்பட்டதும் சிகை அலங்கார நிலையங்களும் திறக்கப்படும்.
ஆனால் இங்கு வழமைபோன்று மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் மாற்றம்பெற
வேண்டும். அதாவது முடிவெட்ட வருகின்றவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து
தங்களுக்கான போர்த்தும் துணியை கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறு அவர்கள் போர்த்தும் துணி வகைகள் கொண்டு வராவிட்டால் துணி இன்றி
முடியை வெட்டிய  பின்னர் அப்படியே அவர்களை வெளியேற்ற வேண்டும்.

எவர் இவ் நிலையங்களுக்குள் வந்தாலும் அத்துடன் நிலையங்களில்
கடமையாற்றுபவர்கள் இருந்தாலும் கட்டாயம் மாஸ் அணிந்திருக்க வேண்டும்.

ஒருவர் போர்த்திய துணியை மற்றையவருக்கு பாவிக்கக்கூடாது. ஒருவருக்கு
பாவிக்கும் சீப்பு. கத்திரிக்கோல் மற்றைவருக்கு பாவிக்கு முன் கிருமி
நாசினியால் நன்கு சுத்தமாக்கிய பின்பே மற்றையவருக்கு பாவிக்க வேண்டும்.

முகச்சவரம் செய்வதை சிகை அலங்கார நிலையங்களில்  தவிர்த்துக்கொள்ள
வேண்டும். ஒருவரின் முடி வெட்டப்பட்டதும் உடன் அவைகளை சுத்தப்படுத்த
வேண்டும்.

நிலையங்களுக்குள் உள் நுழையும்போது கைகள் நன்கு கழுவப்பட வேண்டும். மிக
முக்கியமாக சமூக இடைவெளியை மிகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என சிகை
அலங்கார பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சிகை அலங்கார பிரதிநிதிகள் இவ்
விடயங்களை தங்களுக்குள் மட்டும் வைத்திருக்காது ஏனைய உங்கள்
உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.