தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் இணைவதற்காக செல்லவில்லை அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் சென்றார்கள்- முன்னாள் அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
அரசாங்கம் அண்மையிலே அரசாங்கம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்துத. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அவர்கள் அரசாங்கத்தில் இணையவில்லை என முன்னாள் அமைச்சர் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த 02 ம் திகதி எபோஸ்லி தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அத்தோட்டத்தில் வாழும் ஏனைய மக்களுக்கும் இன்று வெசாக் போயா தினத்தினை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வினை ஆரம்பித்து வைத்து ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
அரசாங்கம் அழைத்த கூட்டத்துக்கு நாங்கள் ஏன் போக வில்லை என்று நீங்கள் கேள்வி கேட்கலாம.; நாங்கள் தற்போது சமகி பலய என்கின்ற சஜித் பிரேமதாஸ கூட்டணியில் தான் போட்டியிடுகிறோம். ஆகவே அந்த அணி இக்கூட்டத்திற்கு போவதில்லை. என்று முடிவு எடுத்து இருப்பதனால் நாங்கள் அந்த கூட்டத்துக்கு போகவில்லை. ஆகவே எங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவோம்.
இதே வேளை இன்று தோட்டப் பகுதியில் தவணை அடிப்படையில் கொள்வனவு செய்த பொருட்களுக்காக தவணை கட்டணங்களை செலுத்துமாறு குறித்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதனை அவ்வாறு செய்ய முடியாது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் கடன்களை மூன்று மாதத்திற்கு பிற்போடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அவ்வாறு இல்லாது தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை