இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 800ஐக் கடந்துள்ளது.
இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில் 563 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை 9 மரணித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை