அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவிற்காக மாதமொன்றுக்கு 100 பில்லியனுக்கும் அதிக நிதி தேவைப்படுவதாக குறித்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழிர்களும் தமது மே மாத சம்பளத்தை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.