அரசாங்கத்திற்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் சஜித்!
படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் ஒழிப்பில், சுகாதாரத்துறையினருக்குப் பக்கபலமாக பாதுகாப்புப் படையினரே திகழ்கின்றனர். இப்போது அவர்களும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தக் கொடூர ஆட்கொல்லி வைரசை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு, தேவையான பாதுகாப்பு அங்கிகள், உபகரணங்கள் அரசால் இதுவரை வழங்கப்படாததே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அரசாங்கம் விரைவாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை