ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கை அநீதியானது – இலங்கை ஆசிரியர் சங்கம்
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவின் கோரிக்கை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையிலேயே குறித்த கோரிக்கை மிகவும் அநீதியானது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அரசு நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது என்பதையும், ஜனாதிபதியின் செயலாளரும் அத்தகைய அழுத்தத்தை மறைமுகமாக ஊக்குவித்துள்ளார் என்பதையும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது. அதற்கிடையில் சம்பளத்தின் ஒரு பகுதியைக் கோருவது அநீதியானது என குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை