ஜனாதிபதியுடன் பேசினார் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ல்ஸ் ஓப்ரைன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
தொலைபேசியூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளளன,
இதன்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது,
அமெரிக்க மக்கள் சார்பாக இலங்கைக்கு வென்டிலேட்டர்களை வழங்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்வமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா – இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்புமானது நீண்ட வரலாற்றைக் கொண்டமைந்தது என்றும் ஓ பிரையன் இதன்போது ஜனாதிபதி கோட்டாபயவிடம் உறுதிப்படுத்தினார்.
அத்துடன் இந்த உரையாடலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முயற்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உரையாடியதாகவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.












கருத்துக்களேதுமில்லை