சீனாவிடமிருந்து மேலும் மருத்துவ உபகரணங்கள்
அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சீனாவின் 03 விமானங்கள் இன்று இலங்கைக்கு வரவுள்ளது.
அதில் 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள், 15 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகள், 30 ஆயிரம் என் 95 வகை முகக் கவசங்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் அடங்குவதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை