கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!
அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜா உரிமை கொண்டிருப்பதாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய கோரி, அதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை