393 கடற்படை சிப்பாய்கள் கொரோனாவுக்கு இலக்கு!
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 393 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று மாலை தெரிவித்தார்.
இவர்களில் 308 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருந்தும், 85 பேர் விடுமுறையில் சென்றிருந்த நிலையிலும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் 10 இராணுவத்தினரும், ஒரு விமானப் படைச் சிப்பாயும் கொரோனாவால் இதுவரை பாதிப்படைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகிய 33 உறவினர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து இதுவரை 41 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை