யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் விடுவிப்பு!

யாழ்ப்பாணம், தென்மராட்சி விடத்தற்பளையில் அமைந்துள்ள 522 படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 298 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 188 ஆண்களும், 110 பெண்களும் இந்த தனிமைப்படுத்தப் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் 17 நாட்கள் தலைமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.