ஊரடங்கு காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 03 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது…
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நோர்வூட் பாலிஸ் பரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் சட்ட விரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் நேற்று (08) மாலை கைது செய்துள்ளனர்.
நோர்வூட் நிவ்வெளி தொழிற்சாலை பிரவிலிருந்து ஒருவரும் நோர்வூட் வெஞ்சர் பகுதியிலிருந்து இருவருமாக மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு தயாரிப்பதற்காக தயார் நிலையில் இருந்த கோடா 25000 மில்லி லீற்றர் இரண்டு கசிப்பு போத்தல்கள் உட்பட தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இதன் போது பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளன.
போலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகலினையடுத்து சுற்றி வளைப்புக்களை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுபான சாலைகள் மூடப்பட்டிருப்பதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு கூடிய விலையில் விற்பனை செய்வதற்காக குறித்த மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யநடவடிக்கை எக்கப்பட்டுள்ளதுடன்; எதிர்வரும் தினங்களில் ஹட்டன நீதவான் முன்னிலையில் அஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
சம்பம் தொடர்பான மேலதிக விசாணைகளை நோர்வூட் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை