யாழ். சண்டிலிப்பாயில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் – இருவர் காயம்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசிப்போருக்கு இடையே சில காலமாக முரண்டாடு இருந்துள்ளது இந்நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டிற்கு சாதாரண உடையில் சென்ற இரு பொலிஸார் அங்கு உரையாடிய பின்பு வேலி பாய்ந்து குறித்த வீட்டிற்குள் பிரவேசித்ததை அடுத்து அங்கு குழப்பம் நிலவியது.

அவர்கள் எழுப்பிய குரல் கேட்டு அயலில் உள்ள இளைஞர்களும் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு இரு பகுதியினருக்கும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காயத்துக்கு உள்ளாகி இருந்தார் அத்தோடு குறித்த வீட்டை சேர்ந்த இளைஞன் ஒருவரும் காயத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அந்த வீட்டிலுள்ள நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்ட நோயாளர் காவு வண்டியும் பொலிஸாரால் திருப்பிவிடப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.