பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனை
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனையை மேற்கொள்ளும் ஒரு விசேட திட்டத்தை விரைவில் தொடங்க தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு வேலை வேலைத்திட்டம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது.
தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கிளினிக்குகளிலிருந்து இருந்து தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதோடு, சமூகத்தில் பரவக்கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டொக்டர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆண் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சின் நடவடிக்கை தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாலியல் தொழிலாளர்களுக்கு பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்படும் என்றும் தேவைப்பட்டால் கம்பஹாவிலும் சோதனைகள் நீடிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான சமீபத்தைய அறிக்கையின் பிரகாரம் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலானவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை