திங்களிலிருந்து குடிவரவு, குடியகல்வு திணைக்களம் திறப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள்  நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஏனைய நாட்களில் திறந்திருக்கும் என்பதோடு, சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் ஊரடங்குச் சட்ட காலத்தில்  கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளையும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை ஒப்படைக்கும் நடவடிக்கை காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முன்னெடுக்கப்படும்.

சாதாரண சேவையின் கீழ், கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் நடவடிக்கை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு கடவுச்சீட்டு தகவல்களில் திருத்தம், குடியுரிமையைப் பதிவு செய்தல், இந்திய மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த நபர்களின் குடியுரிமை தொடர்பான விடயங்கள்,  கடவுச்சீட்டு தரவு பக்கத்தில் தகவல்களை உள்ளீடு செய்தல் மற்றும் கடவுச்சீட்டு தரவு பக்கம் மற்றும் ஏனைய பக்கங்களின் அரபு மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முன்னெடுக்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.