கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு மேல் மாகாணத்தில் தற்காலிக தங்குமிடங்கள், வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்களே, 4 ஆவது கட்டமாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் இரத்மலானை புகையிரத மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு அங்கிருந்து உரிய பகுதிகளுக்கு அனுப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த 5 ஆம் திகதி நுகேகொடை பொலிஸ் வலயத்தில் 600 பேர், கடந்த 7 ஆம் திகதியும்  1200 பேர் மற்றும் களனி பொலிஸ் பிரிவில் இருந்த 370 பேர் கடந்த சனிக்கிழமை  2 ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பட்டனர்.

மேல் மாகாண ஆளுநர், மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ரொஷான் குணதிலகவின் திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழி நடாத்தலில், இந்நடவடிக்கைகள்ன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.