ஊரடங்கு சட்டத்தை நீக்கியமை மக்கள் தலையில் மண்ணை தூவும் செயல் – பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

கொரோனா வைரஷ் நோயாளர் தொகை முயல் வேகத்தில் கூடிக்கொண்டு போகும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் தலையில் மண்ணை வீசும் செயலாகவே இதனை பார்க்க முடிகிறது. இன்னும் சொல்வதானால் மக்கள் செத்தாலும் பறவாய் இல்லை தேர்தலே எமக்கு முக்கியம் என்பதையே ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட செயல் தெளிவாக கோடிட்டு காட்டுகிறது   என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஊரடங்கு சட்டம் தளர்தப்படுவது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்.
கடந்த மார்ச் 16,ம் திகதி இலங்கையில் கொரோனா வைரஷ. நோய் தாக்கம் ஆரம்பித்த காலத்தில் இலங்கை மருத்துவர் சங்கத்தின் ஆலோசனையை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் 20, ம்்திகதி தொடக்கம் தொடரான ஊரடங்கு சட்டம் பிறப்பித்து மொதுமக்களின் நடமாட்டத்தை ஒரு கட்டுக்கோப்பிற்கு கொண்டு வந்ததன் காரணமாக பல மாவட்டங்கள் நோய்தாக்கத்தில் இருந்து ஓரளவு காப்பாற்றப்பட்டது.
ஆனால் வெலிசறை கடல்படை முகாமில் கொரோனா வைரஷ் தாக்கம் ஊடுருவியதால் கடல்படை வீரர்களுக்கு 450 க்கு மேற்பட்டவர்கள் நோயால் பாதிக்கப்பட்டனர் தற்போது 825, க்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாளாந்தம் நோயாளர் தொகை சமூகத்தில் இருந்து அதிகரித்தி செல்கின்றதை காணமுடிகிறது.
இந்த இக்கட்டான நிலையில் தேர்தலை மையாமாக கொண்டு அவசரப்பட்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதாக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை பாரதூரமான தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.
அவசரப்பட்டு ஊரடங்கு சட்டத்தை முற்றாக நீக்குவதன் மூலம் இலங்கையில் உள்ள 24, மாவட்டங்களுக்கும் இலவசமாக கொரோனா வைரஷ் நோயை வரவழைக்கும் ஒரு சதிகார செயலாகவே இதனை பார்க்க முடிகிறது.
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை தளர்துவதாகவும் தற்போது அறியமுடிகிறது இதன் காரணமாக கொழும்பு களுத்துறை மாவட்டங்களில் ஏற்கனவே கொரோனா நோய் தாக்கம் இருந்த இடங்களில் உள்ள மக்கள் வேறுமாவட்டங்களுக்கு இலகுவாக செல்லும் நிலை ஏற்படுமாயின் ஒருசில மாட்டங்களில் முடங்கி இருந்த கொரோனா வைரஷ் தாக்கம்  ஏனைய மாவட்டங்களுக்கும் பரவும் நிலை நிச்சயமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
அரச மருத்துவ சங்கத்தின் பணிப்பாளரின் கருத்துப்படி மக்கள் தவறு இழைத்தால் கொரோனா நோய் பரவ வாய்ப்புள்ளதாக பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
அப்படியாயின் மக்கள் மீது பழியைப்போட்டு தாம் தப்பிக்க பார்க்கும் ஒரு கூற்றாகவே அரச மருத்துவர் சங்கத்தின் பணிப்பாளரின் இந்த அறிக்கை தெளிவாக கோடிட்டுக்காட்டுகிறது.
மக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் கடமை சுகாதார அமைச்சுக்கும் இலங்கை அரச தலைவருக்கும் உண்டு முதலில் நோயை கட்டும்படுத்திவிட்டே அடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் ஆனால் மக்களை திர்கதியாக விட்டுவிட்டு உங்களை நீங்களே பாதுகாக்க வேண்டும்  என மக்கள் மீது  விரல் நீட்டுவது எந்தவகையில் பொருந்தும்.
தேர்தல் மட்டுமே இலக்கு மக்கள் செத்தாலும் பறவாய் இல்லை என்கதைப்போன்ற செயல்பாடாகவே இந்த ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்டதை அவதானிக்க முடிகிறது.
ஆரம்பத்தில் இந்த நோய் தடுப்புக்காக அரசும் ஜனாதிபதியும், சுகாதார அமைச்சும், பாதுகாப்பு படையினரும், ஏனைய திணைக்களத்தலைவர்களும் கூட்டாக எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருந்தது அவர்களின் ஆரோசனைகள் நிமிர்த்தம் பொதுமக்கள் ஊரடங்கு சட்டம், சமூக இடைவெளிகளை பேணி எப்படியும் எமது நாட்டில் இருந்து கொரோனா வைரஷ் நோயை இல்லாமல் செய்ய ஒன்றுபட்டு உழைத்தனர் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
தற்போது நாளாந்நம் நோய் பாதிப்பு கூடிச்செல்லும் நிலையில் ஊரடங்கு சட்டம் தளர்தப்படுவதன் நோக்கம் தேர்தலை மையப்படுத்தி மட்டுமே என்பது வெளிப்படையாக தெரிகிறது.
மக்கள் நலனைவிட தேர்தலைநடத்தி ஆட்சியை தக்கவைப்பதற்காகவே ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்டுள்ளது இதனால் எதிர்காலத்தில் மக்கள் கொரோனா நோய் அதிகரிக்குமீனால் அதன் காரணமாக பாரிய அழுவுகள் நாட்டில் ஏற்படுமானால் இலங்கை அரசே முழுப்பொறுப்பெடுக்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.