அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம்!
நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக அரச, தனியார் சேவைகளுக்கு செல்லும் பிரிவினருக்கு மாத்திரம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை