நாளை முதல் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை – இராணுவ தளபதி

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அடையாள அட்டையை பயன்படுத்தும் விதம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரகாரம் செல்லுமாறும் அதிகளவில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அரச தனியார் நிறுவனங்கள் பணியாளர்கள் பயணிப்பதற்காக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றினை தனிப்பட்ட பயணங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றும் அத்துடன் தொற்று பரவாதமுறையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.