ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் – கண்டிக்கிறார் செல்வம்

Capital F.M , இணையம் ஊடாக தழிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் பேட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில் ஒட்டுமொத்தமான ஆயுதப்போராட்டத்தினை தவறு என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

https://www.facebook.com/selvam.adaikalanathan/videos/3105123459551679/?t=4

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டமாகும். அயுதம் ஏந்தி போராடி இலங்கை அரசினை பணியவைத்து அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடனே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அப்படியான வரலாற்றுப்பின்னணியைக்கொண்ட கூட்டமைப்பில் இருந்து கொண்டு M.A சுமந்திரன் அவர்கள் இப்படியான கருத்துக்களை தெரிவிக்கலாகாது. அதனை நங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆயுதப்போராட்டத்திலே பொதுமக்கள் , போராளிகள் ஒட்டு மொத்தமாக தங்கள் உயிரினை அர்ப்பணித்துள்ளார்கள். ஆயுதப்போராட்டத்தினூடாகவே தமிழ்மக்களிடைய பிரச்சினைகள் உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லப்பட்டது. ஆயுதப் போராட்டத்தினூடாகவே இலங்கை அரசாங்கத்துடன் எமது பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

அந்தவகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுமந்திரன் அவர்களுக்கு தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றது. தமிழரசு கட்சி இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரி நிற்கின்றது. – என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.