அமெரிக்க குடியுரிமையை ஏப்ரல் மாதத்தில் கைவிட்டார் ஜனாதிபதி கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஏப்ரல் மாதத்தில் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் என்பதை அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தூதரக பேச்சாளர், ஜனாதிபதி அமெரிக்க குடிமகன் அல்ல எனத் கூறியுள்ளார்.
“ஏப்ரல் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். அவர் இனி ஒரு அமெரிக்க குடிமகன் அல்ல” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துகொள்வதற்கு விண்ணப்பித்தவர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் பெயர்களை உள்ளடங்கிய முதலாவது காலாண்டுக்கான பட்டியலை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது.
இதனை அடுத்து ஜனாதிபதிவின் இரட்டைக் குடியுரிமை நீக்கம் குறித்து முன்னாள் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவின் ஊடாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை