மன்னாரில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள்…

மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் முற்றாக தளர்த்தப்பட்டதன் பின்னர்
நேற்று திங்கள் கிழமை (11.05.2020) மன்னார் மாவட்டத்தில் வழமைபோன்ற ஒரு
நிலமை காணப்பட்டது.

கடந்த நாட்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது ஓரிரு இலங்கை
போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வந்தபோதும் நீண்ட நாட்களின் பின் நேற்று
திங்கள் கிழமை (11) மட்டுப்படுத்தப்பட்ட முறையில் தனியார் போக்குவரத்து
சேவைகளும் இடம்பெற்றது.

சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில்
போக்குவரத்து சேவைகளிலும் ஒரு ஆசனத்தில் ஒருவர் என்ற விகிதத்திலே
பிரயாணிகள் பிரயாணம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

போக்குவரத்து சேவையில் நஷ;டத்தை எதிர்நோக்குவதால் மட்டுப்படுத்தப்பட்ட
நிலையில் போக்குவரத்து சேவையால் சில பகுதிகளில் பிரயாணிகள் நீண்ட நேரம்
போக்குவரத்துக்காக காவல் நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

பெரும்பாலான அரச அரசு சார்பற்ற திணைக்களங்களில் ஊழியர்கள் சமூகம் அளித்து
தங்கள் கடமைகளை மேற்கொண்டு வந்ததையும் நோக்கக்கூடியதாக இருந்தது.

நீண்ட நாட்களாக கிடக்கையில் இருந்துவந்த மன்னார் தலைமன்னார் பிரதான
பாதையின் வேலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும்
பார்க்கக்கூடியதாக இருந்தது.

மன்னார் பிரதம தபாலகத்தில் மட்டும் ஒரு நீண்ட வரிசை காணப்பட்டது. நேற்றைய
தினம் (11) மன்னார் பிரதம தபால் அலுவலகத்தில் பொது சன மாதாந்த
கொடுப்பனவு, காசநோய் கொடுப்பனவு விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவுகள்
வழங்கப்பட்டமையாலேயே இவ் நீண்ட வரிசை காணப்பட்டது. சமூக இடைவெளியை
கடைப்பிக்கும் படி மன்னார் பிரதம தபால் அதிபர் இவ் வரிசையில்
செயல்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும் நோக்கக் கூடியதாக இருந்தது.

நான்கு நாட்களுக்குப் பின்னர் மன்னாரில் ஊரடங்கு நேற்று (11)
தளர்த்தப்பட்டதும் முன்னையதுபோன்று மக்கள் பொருட்களை; கொள்முதல்
செய்வதில் பெரும்பான்மையாக காணப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.