பெரியநீலாவணை தொடர்மாடியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை: கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நேரில் சென்று பார்வை…..

பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்கைக்கிள் ஒன்று எரிந்து சாம்பலாகியுள்ளது. (12) நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதுடன் இதனை அண்டிய கட்டிடத்தின் சுவர்களிலும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் இதன் புகை பரவிக்காணப்படுகின்றது. அத்துடன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கைக்கிள் ஒன்றும் சிறு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு பகுதிக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், மின் ஒழுங்கினை விரைந்து சீர்செய்து வழங்குமாறு தொலைபேசி மூலமாக இலங்கை மின்சார சபை பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.