பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு! நிதிபறிமாற்ற மோசடி
கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டு மக்களை அவதானமாக செயற்படும்படி அறிவுறுத்தியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்து சிலருக்கு தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக 25 ஆயிரம் ரூபாயினை தொலைபேசி எண்மான நிதிபறிமாற்ற முறையின் ஊடாக வைப்புச் செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக தற்போது பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் வரும்போது பொதுமக்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை