ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் – அனந்தி

விடுதலைப் புலிகளையும் தமிழர் தியாகங்களையும் வைத்து வாக்கு பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியது தவறு என்றால் சுமந்திரன் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற்றிருக்கலாம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளையும், தமிழரின் தியாகங்களையும் பயன்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெற்றுவிட்டு பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடியதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறாயின் அவர் ஐந்து வயதிலிருந்து பழகிய சிங்கள மக்களிமிருந்து வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் போயிருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

தந்தை செல்வாவினுடைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையான போராட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ளாத ஒருவராகவே காட்டிவிட்டு வாக்குகளிற்காக புாராளிகளின் தியாகங்களையும்தமிழர்களின் அர்ப்பணிப்புக்களையும் பயன்படுத்தி வாக்குகளை பெற்றுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அனந்தி சசிதரன் கடும் கண்டணங்களை தெரிவித்த அனந்தி சசிதரன், விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்தமையையும், அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் தற்போது இந்த அரசாங்கத்திற்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.