ஆயுதப் போராட்டத்தை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு அருகதையற்றவர் – சிவமோகன்

ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத அடையாளம் என்றும் அதனை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு அருகதையற்றவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அகிம்சை அடக்கம் செய்யப்பட்ட நாட்டில் யுத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்டது. எனவே ஈழ விடுதலை போராட்டத்தையும் தேசிய தலைவரது அரசியல், ஆயுத போராட்டத்தையும் எவராலும் மறுக்க முடியாது. மறுப்பவர் ஈழத்தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவர்.

சுமந்திரனது கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டு போகட்டும். அப்பிடி ஒரு வசனம் தனிப்பட்ட கருத்தாககூட சுமந்திரனின் வாயில் இருந்து வந்திருக்கக்கூடாது.

ஒரு கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தை கூறும்போது அது அவரது கட்சிக்கும் பாதிப்பு செலுத்தும். எனவே ஒரு கருத்தை கூறிவிட்டு தனிப்பட்ட கருத்து என்று கூறுவது அழகாக இருக்காது. அந்த தவறை அவர் விட்டிருக்கக்கூடாது.

ஆயுதப் போராட்டம் கையில் எடுக்கப்படவில்லையாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழர்களும் அடையாளம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத அடையாளம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.